Homeசெய்திகள்சினிமாஒரே நேரத்தில் 100 குழந்தைகளுக்கு உதவிய KPY பாலா!

ஒரே நேரத்தில் 100 குழந்தைகளுக்கு உதவிய KPY பாலா!

-

KPY பாலா சின்னத்திரையில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் தனது நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து வைத்துள்ளார். ஒரே நேரத்தில் 100 குழந்தைகளுக்கு உதவிய KPY பாலா!அதை தொடர்ந்து இவர் வெள்ளித்திரையிலும் நுழைந்து நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம், KPY பாலா ஏழை எளிய மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்.
அந்த வகையில் ஏற்கனவே மலைவாழ் மக்களுக்கு இலவசமாக ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்பாடு செய்து தந்து பல்வேறு தரப்பினரிடைய பாராட்டுகளை பெற்றார். அடுத்தது ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து மாற்றம் என்ற அமைப்பில் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு இரு சக்கர வாகனங்கள் வாங்கித் தருவது போன்ற பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் KPY பாலா. ஒரே நேரத்தில் 100 குழந்தைகளுக்கு உதவிய KPY பாலா!இவ்வாறு ஏகப்பட்ட உதவிகளை செய்து வரும் பாலாவை பலரும் இவர்தான் ரியல் ஹீரோ என்று கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் KPY பாலா காது கேட்காதகாது கேட்காத குழந்தைகளுக்கு ஓடி வந்து உதவியுள்ளார். அதுவும் ஒன்று, இரண்டு குழந்தைகளுக்கு கிட்டத்தட்ட 100 குழந்தைகளுக்கு 200 செவித்திறன் கருவிகள் கொடுத்து உதவியுள்ளார். ஒரே நேரத்தில் 100 குழந்தைகளுக்கு உதவிய KPY பாலா!இது தொடர்பான வீடியோவை KPY பாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவருடைய இந்த செயல் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பாலாவிற்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

MUST READ