வடிவேலுவின் புதிய படத்தில் நடிகை கோவை சரளா இணைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
நகைச்சுவை என்றாலே நம் நினைவுக்கு வருவது வடிவேலு தான். இவர் 90 முதல் 2000 காலகட்டத்தில் ஒரு நகைச்சுவை நடிகராக தனக்கென தனி ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி ஏராளமான ரசிகர்களை கவர்ந்திழுத்தவர். இருப்பினும் சமீப காலமாக இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. அதேசமயம் மாமன்னன் படத்தில் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த இவர் தற்போது கேங்கர்ஸ் படத்தை கைவசம் வைத்துள்ளார். சுந்தர். சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையில் இவர், ஆர் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் மாரீசன் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் பகத் பாசிலும் வடிவேலுவுடன் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகை சித்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படம் 2025 ஜூலை மாதம் திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகை கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. அதாவது இந்த படத்தில் கோவை சரளா சீனியர் போலீஸ் ஆபீஸராக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
வடிவேலு, கோவை சரளா காம்போவின் காமெடிகள் பல இன்று வரையிலும் பலரின் ஃபேவரைட்டாக இருந்து வருகிறது. இந்நிலையில் மீண்டும் இந்த கூட்டணி இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.