- Advertisement -
சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி வரும் கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர் சீனு ராமசாமி. தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் போன்ற படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் சீனு ராமசாமி. இவருடைய படங்கள் எதார்த்த நடையிலும் மண்வாசம் மற்றும் மனிதம் பேசும் படங்களாகவே இருக்கும். இவருடைய இயக்கத்தில் உருவாகி வெகு நாட்களாக ரிலீஸ் ஆகாமல் இருக்கும் திரைப்படம் “இடம் பொருள் ஏவல்“. இப்படத்தின் பாடல்கள் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றன. இருப்பினும் சில காரணங்களால் இப்படம் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
