spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇணையத்தை கலக்கும் 'குபேரா' பட புதிய பாடல்!

இணையத்தை கலக்கும் ‘குபேரா’ பட புதிய பாடல்!

-

- Advertisement -

குபேரா படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகியுள்ளது.இணையத்தை கலக்கும் 'குபேரா' பட புதிய பாடல்!

தனுஷின் 51வது படமாக உருவாகும் குபேரா திரைப்படம் வருகின்ற ஜூன் 20ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராக வருகிறது. இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருக்கிறார். நிகேத் பொம்மி இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். படத்தில் தனுஷ் உடன் இணைந்து நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படமானது அரசியல் திரில்லர் ஜானரில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது. அதன்படி பான் இந்திய அளவில் வெளியாக உள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

we-r-hiring

இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், டீசரும், முதல் பாடலும் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்ததாக இந்த படத்தில் இருந்து கதை கதை கதை எனும் இரண்டாவது பாடல் வெளியாகிய இணையத்தை கலக்கி வருகிறது. இந்த பாடல் வரிகளை விவேகா எழுதி இருக்கும் நிலையில் ஹைடு கார்டி மற்றும் கரீமுல்லா ஆகியோர் இணைந்து பாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ