Homeசெய்திகள்சினிமாதயாரிப்பாளராக உருவெடுத்த குத்து பட நாயகி.... எக்ஸ் பக்கத்தில் நெகழ்ச்சி பதிவு!

தயாரிப்பாளராக உருவெடுத்த குத்து பட நாயகி…. எக்ஸ் பக்கத்தில் நெகழ்ச்சி பதிவு!

-

நடிகை திவ்யா ஸ்பந்தனா, கடந்த 23 ஆம் ஆண்டு கன்னட திரை உலகில் அபி எனும் படத்தின் மூலம் அறிமுகமானவர். தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான குத்து திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனாவாக வலம் வரும் இவர் சிறந்த நடிகைக்காக பல விருதுகளை வென்றுள்ளார். அந்த வகையில் இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.தயாரிப்பாளராக உருவெடுத்த குத்து பட நாயகி.... எக்ஸ் பக்கத்தில் நெகழ்ச்சி பதிவு!

திவ்யா ஸ்பந்தனா, சூர்யா, சிம்பு, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். அந்த வகையில் பொல்லாதவன், வாராணம் ஆயிரம் உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தன.
கடைசியாக இவர் கன்னடத்தில் வெளியான ஹாஸ்டல் ஹூடுகாரு பேககிடரே என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இவர் ஆப்பிள் பாக்ஸ் ஸ்டூடியோ நிறுவனத்தின் மூலம் சுவாதி முத்தின மலே ஹானியே என்ற கன்னட படம் ஒன்றையும் தயாரித்திருக்கிறார். இப்படம் இன்று வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து திவ்யா ஸ்பந்தனா தனது சமூக வலைதள பக்கத்தில், ” நான் தயாரித்துள்ள முதல் படமான சுவாதி முத்தின மலே ஹனியே திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த படம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்று நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார்.

MUST READ