spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'D56' படத்தின் ஷூட்டிங் குறித்த புதிய தகவல்!

‘D56’ படத்தின் ஷூட்டிங் குறித்த புதிய தகவல்!

-

- Advertisement -

D56 படத்தின் ஷூட்டிங் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.'D56' படத்தின் ஷூட்டிங் குறித்த புதிய தகவல்!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் தற்போது குபேரா திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படம் வருகின்ற ஜூன் 20ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. அதேசமயம் தனுஷ் இட்லி கடை, தேரே இஷ்க் மெய்ன் போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார். அமரன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55 வது திரைப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தனுஷின் 56வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. மாரி செல்வராஜ் இயக்க உள்ள இந்த படத்திற்கு தற்காலிகமாக D56 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. கர்ணன் படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷ்- மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதேசமயம் அறிவிப்பு போஸ்டரும் ரசிகர்களை கவர்ந்தது.'D56' படத்தின் ஷூட்டிங் குறித்த புதிய தகவல்! அதாவது வரலாற்று பின்னணியில் ஹாரர் – திரில்லர் ஜானரில் உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரமின் பைசன் திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படம் தீபாவளிக்கு வெளியிட்ட திட்டமிடப்பட்டிருப்பதால், அதன் பிறகு டிசம்பர் மாதத்தில் D56 படம் தொடங்கும் என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ