லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங் இயக்குனராக வலம் வருபவர். அதாவது இவருடைய இயக்கத்தில் வெளியான கைதி மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இருப்பினும் கடைசியாக வெளியான ‘கூலி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அத்துடன் லோகேஷ் கனகராஜை பலரும் ட்ரோல் செய்து வந்தனர். இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் ‘கைதி 2’ படத்தை கையில் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லோகேஷ் கனகராஜ் தெலுங்கு பக்கம் திரும்பி இருப்பதாகவும் சமீப காலமாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அதன்படி பிரபாஸ் – பவன் கல்யாண் ஆகிய இருவரையும் வைத்து பிரம்மாண்ட பட்ஜெட் படத்தை இயக்கப் போகிறார் என்று பேச்சு அடிபட்டது.
ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் லோகேஷ் கனகராஜ், அல்லு அர்ஜுனிடம் கதை சொன்னதாக சொல்லப்படுகிறது. எனவே இந்த கூட்டணி இனிவரும் நாட்களில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படமானது அல்லு அர்ஜுனின் 23 வது படமாக உருவாகும் என்றும் இதற்கு அனிருத் இசையமைக்கப்போகிறார் என்றும் பல தகவல்கள் வெளியாகி எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தி வருகின்றன.


