நடிகர் கவின் டாடா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பல படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் கவின் நடிப்பில் கடந்த மே 10ஆம் தேதி வெளியான ஸ்டார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. அடுத்ததாக நடிகர் கவின், நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் ப்ளடி பெக்கர் எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். அதேசமயம் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாக இருக்கும் மாஸ்க் எனும் திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார். இதில் கவின் உடன் இணைந்து நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படமானது பூஜையுடன் தொடங்கப்பட்டது.
அது மட்டும் இல்லாமல் நடிகர் கவின், நடன இயக்குனர் சதீஷ் இயக்கி வரும் கிஸ் எனும் திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் நடிகர் கவினுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க போவதாக பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. அதன்படி வெற்றிமாறன் தயாரிக்க உள்ள புதிய படத்தில் தான் நடிகை நயன்தாரா கவினுடன் இணைந்து நடிக்கப் போகிறார் என்று சொல்லப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் கவின், நயன்தாரா கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தினை விஷ்ணு எடாவன் இயக்கப் போகிறார் என்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கப் போகிறது என்றும் கிட்டத்தட்ட உறுதியான தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதாவது விஷ்ணு எடாவன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படத்தில் பாடல் எழுதியுள்ளார். மேலும் கவினின் டாடா திரைப்படத்திலும் பாடல் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கவின், நயன்தாரா, விஷ்ணு எடாவன் ஆகியோரின் கூட்டணியில் உருவாக புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -


