Homeசெய்திகள்சினிமாபிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

-

பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

ஜூனியர் என்டிஆர் கடைசியாக ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருந்த இந்த படம் வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கியது. அடுத்ததாக இவர் கொரட்டலா சிவா இயக்கத்தில் தேவரா எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இரண்டு பாகங்களாக இந்த படம் வெளியாக இருக்கிறது. அதன்படி தேவரா பாகம் 1 வருகின்ற செப்டம்பர் 27 அன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. அடுத்ததாக ஜூனியர் என்டிஆர், கே ஜி எஃப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தனது 31வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்! NTR31 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் நந்தமுரி தரகா ராமா ராவ் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து படத்தை தயாரிக்க இருக்கிறது. ஆக்சன் நிறைந்த கதைக்களத்தில் உருவாக உள்ள இந்த படமானது வருகின்ற ஆகஸ்ட் 9ஆம் தேதி பூஜையுடன் தொடங்க இருப்பதாக புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவினர் சார்பில் விரைவில் வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது.

MUST READ