Homeசெய்திகள்சினிமாஹரோல்ட் தாஸ்.....'லியோ' ஆக்ஷன் கிங் அர்ஜுனின் கிளிம்ப்ஸ் வெளியீடு!

ஹரோல்ட் தாஸ்…..’லியோ’ ஆக்ஷன் கிங் அர்ஜுனின் கிளிம்ப்ஸ் வெளியீடு!

-

லியோ படத்தில் நடித்துள்ள ஆக்சன் கிங் அர்ஜுனின் கிளிம்ப்ஸ் வெளியாகி உள்ளது.

லியோ திரைப்படம் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படமாகும். மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இந்த கூட்டணி இணைந்துள்ளதால் ஆரம்பத்தில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இதில் விஜய் உடன் இணைந்து அர்ஜுன், சஞ்சய்தத், திரிஷா, மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. மேலும் இப்ப படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

சமீபத்தில் விஜய் ஃபர்ஸ்ட் லுக், சஞ்சய் தத் ஃபர்ஸ்ட் லுக், நா ரெடி பாடல் உள்ளிட்டவை அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது ஆக்ஷன் கிங் அர்ஜுனின் பிறந்த நாளான இன்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக லியோ படக்குழுவினர் அர்ஜுனன் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதில் அர்ஜுன் மிரட்டலான லுக்கில் காணப்படுகிறார். மிகப்பெரிய கூட்டங்களுக்கு நடுவில் ஒருவனின் கையை வெறித்தனமாக வெட்டுகிறார்.இதன் மூலம் வன்முறையான கதாபாத்திரம் அர்ஜுனுக்கு இருக்கும் என்று தெரிகிறது. வழக்கம்போல் அனிருத்தும் மிரட்டலான பின்னணி இசையை கொடுத்துள்ளார். சஞ்சய் தத் இதில் ஆண்டனி தாஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அர்ஜுன் ஹரோல்ட் தாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.அதனால் தாஸ் குடும்பத்தில் ஒருவராக அதாவது சஞ்சீதத்திற்கு சகோதரராக அர்ஜுன் இருக்க வாய்ப்புள்ளது. இறுதியில் அர்ஜுனின் விண்டேஜ் டயலாக் ஆன ‘தெறிக்க’ என்ற டயலாக் உடன் கிளிம்ஸ் முடிவடைகிறது. இது தற்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

MUST READ