Homeசெய்திகள்சினிமாநடிகர் கமல்ஹாசன் மீது புகார்... தயாரிப்பாளர் சங்கத்தில் கோரிக்கை..

நடிகர் கமல்ஹாசன் மீது புகார்… தயாரிப்பாளர் சங்கத்தில் கோரிக்கை..

-

- Advertisement -
நடிகர் கமல்ஹாசன் மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில், இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தில் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் உத்தம வில்லன். இத்திரைப்படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தை கமல்ஹாசன், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ், சந்திர ஹாசன் ஆகியோர் தயாரித்து இருந்தனர். இப்படத்தில், கமலுடன் இணைந்து ஆண்ட்ரியா, விஷ்வநாத், நாசர், பூஜா குமார், ஊர்வசி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்திருக்கிறார். இத்திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் பெற்றது. படம் தோல்வியைச் சந்தித்தது

உத்தம வில்லன் திரைப்படத்தால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால், 30 கோடியில் மீண்டும் ஒரு படத்தை செய்து தருவதாக கமல்ஹாசன் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் உறுதி அளித்திருந்தார். ஆனால், படம் வெளியாகி 9 ஆண்டுகள் ஆன நிலையிலும், இதுவரை கமல்ஹாசன் படம் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்று திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்திலும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் புகார் அளித்துள்ளது.

அதில், நடிகர் கமல்ஹாசன் உத்தரவாதம் அளித்து சுமார் 9 ஆண்டுகள் ஆன போதிலும், இதுவரை தங்களுக்கு விருப்பமான கதையில் தயாரித்து நடித்து கொடுக்கவில்லை. இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு, பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ