லாக் டவுன் படத்தின் புதிய பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
‘பிரேமம்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக ‘பைசன்’ படத்தில் நடித்திருந்தார். மேலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அனுபமா. அதன்படி ஏ.ஆர். ஜீவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் லாக் டவுன் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை லைக்கா ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இதில் அனுபமா பரமேஸ்வரன் தவிர சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி மற்றும் பலர் நடித்துள்ளனர். என்.ஆர். ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் ஆகியோர் இதன் இசையமைப்பாளர்களாக பணியாற்றி வரும் நிலையில், கே.ஏ. சக்திவேல் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். கொரோனா லாக் டவுன் சமயத்தில் ஒரு நபர் அனுபவிக்கும் துயரங்களை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
“Kanaa” arrives today at 5 PM! 🎶
The second single from #Lockdown is ready to touch your hearts. ❤️@anupamahere #ARJeeva @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran #PriyaaaVenkat @shakthi_dop @NRRaghunanthan @sidvipin @EditorSabu @sherif_choreo #SriGirish #OmSivaprakash… pic.twitter.com/u4W9lwSbie— Lyca Productions (@LycaProductions) November 25, 2025

ஏற்கனவே இதன் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து டீசரும், முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. அடுத்தது இப்படம் வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ‘கனா’ எனும் இரண்டாவது பாடல் இன்று (நவம்பர் 25) மாலை 5 மணி அளவில் வெளியாகும் என படக்குழு ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


