Homeசெய்திகள்சினிமாஅதான் துப்பாக்கிய கையில வாங்கிட்டாருல..... சிவகார்த்திகேயன் குறித்து லோகேஷ் கனகராஜ்!

அதான் துப்பாக்கிய கையில வாங்கிட்டாருல….. சிவகார்த்திகேயன் குறித்து லோகேஷ் கனகராஜ்!

-

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது அமரன் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் வருகின்ற அக்டோபர் 31 தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்த படத்தினை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கும் நிலையில் ராஜ்குமார் பெரியசாமி படத்தினை இயக்கியிருக்கிறார்.அதான் துப்பாக்கிய கையில வாங்கிட்டாருல..... சிவகார்த்திகேயன் குறித்து லோகேஷ் கனகராஜ்! ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசை அமைத்துள்ளார். இந்த படமானது மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடிக்க அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியான நிலையில் தற்போது அடுத்தடுத்த பாடல்களையும் படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை வெளியான முதல் இரண்டு பாடல்களுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி, சாய் பல்லவி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் இயக்குனர்கள் மணிரத்னம் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.அதான் துப்பாக்கிய கையில வாங்கிட்டாருல..... சிவகார்த்திகேயன் குறித்து லோகேஷ் கனகராஜ்! அப்போது லோகேஷ் கனகராஜிடம், “உங்களது படங்களில் எல்லாரையும் டானாக நடிக்க வைப்பீர்கள். எப்போது எங்கள் டானை வைத்து படம் பண்ண போகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு லோகேஷ் கனகராஜ், “இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சீக்கிரமே அது நடக்கும். அதான் துப்பாக்கிய கையில வாங்கிட்டாருல” என்று சொன்னதும் கரகோஷமும் விசில் சத்தமும் விண்ணை பிளந்தது.

எனவே விரைவில் லோகேஷ் கனகராஜ், சிவகார்த்திகேயன் கூட்டணியில் புதிய படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ