Homeசெய்திகள்சினிமாலோகேஷ் கனகராஜ், ராகவா லாரன்ஸ் கூட்டணியின் புதிய படம்..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

லோகேஷ் கனகராஜ், ராகவா லாரன்ஸ் கூட்டணியின் புதிய படம்….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்துள்ளார். அடுத்ததாக இவர் ரஜினி நடிப்பில் தலைவர் 171 படத்தை இயக்க இருக்கிறார். இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார். லோகேஷ் கனகராஜ், ராகவா லாரன்ஸ் கூட்டணியின் புதிய படம்..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!அதன்படி தனது ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் சார்பில் பைட் கிளப் எனும் திரைப்படத்தை ஏற்கனவே தயாரித்திருந்தார். இதைத்தொடர்ந்து பென்ஸ் (BENZ) எனும் புதிய படத்தையும் தயாரிக்கிறார் லோகேஷ். அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்கு லோகேஷ் கனகராஜ் தான் கதையும் எழுதியுள்ளார். மேலும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க பாக்யராஜ் கண்ணன் இந்த படத்தை இயக்க உள்ளார். இது சம்பந்தமான அறிவிப்பு தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த அறிவிப்பு போஸ்டரில் A WARRIOR WITH THE CAUSE IS THE MOST DANGEROUS SOLDIER என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனத்துடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனம் ஆகிய நிறுவனங்களும் இணைந்து பென்ஸ் திரைப்படத்தை தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.லோகேஷ் கனகராஜ், ராகவா லாரன்ஸ் கூட்டணியின் புதிய படம்..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அதேசமயம் முன்னதாக இந்த படத்தை லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனர் ரத்னகுமார் தான் இயக்க இருந்தது. பின்னர் ஒரு சில காரணங்களால் ரத்னகுமார் இந்த படத்தில் இருந்து வெளியேற பாக்யராஜ் கண்ணன் இந்த படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ