Homeசெய்திகள்சினிமாதலைவர் 171 படத்தின் ஷூட்டிங் எப்போது?..... லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்!

தலைவர் 171 படத்தின் ஷூட்டிங் எப்போது?….. லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்!

-

நடிகர் ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியான படம் ஜெயிலர். நெல்சன் இயக்கத்தில் வெளியான இந்த படம் 600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வெற்றி பெற்றது. ஜெயிலர் படத்திற்கு பின் நடிகர் ரஜினி தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். ஜெய் பீம் படத்தின் இயக்குனரான டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி, அமிதாப்பச்சன், ராணா டகுபதி, பகத் பாசில், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.தலைவர் 171 படத்தின் ஷூட்டிங் எப்போது?..... லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்!

இதற்கிடையில் ரஜினி தனது 171 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. தற்போது லோகேஷ் கனகராஜ், ரஜினி கூட்டணியில் உருவாகும் தலைவர் 171 திரைப்படமானது தனி கதையாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய லோகேஷ் கனகராஜ், ” தாங்கள் இப்போதுதான் லியோவில் இருந்து வெளியே வந்திருக்கிறோம். அடுத்த வாரம் நான் தலைவர் 171 படத்தின் ஸ்கிரிப்ட் எழுதும் பணியை தொடங்க இருக்கிறேன். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆரம்பமாகும்” என்று கூறியிருக்கிறார்.தலைவர் 171 படத்தின் ஷூட்டிங் எப்போது?..... லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்!

மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்க உள்ளது. ரஜினியின் பேட்ட, ஜெயிலர் உள்ளிட்ட படங்களைப் போல இந்த படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ