கடந்த பிப்ரவரி மாதம் சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கத்தில் வெளியாகி கிட்டத்தட்ட 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்த திரைப்படம் தான் மஞ்சும்மெல் பாய்ஸ். கொடைக்கானலில் உள்ள குணா குகையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த இந்த படம் கேரளாவை தாண்டி தமிழ் ரசிகர்களையும் பெரிய அளவில் கவர்ந்தது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சௌபின் சாகிர் தற்போது ரஜினியின் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன்படி இந்த படத்தில் தயாள் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சௌபின் சாகிர். இந்த படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தினை தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில் தற்போது ஹைதராபாத், விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் சௌபின் சாகிருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “உங்களுடன் கூலி படத்தில் பணி புரிவது ஒரு அற்புதமான அனுபவம் சௌபின் சாகிர் சார். உங்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சௌபின் சாகிருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் லோகேஷ்.
Working with you in #Coolie has been an enthralling experience #SoubinShahir sir ❤️
Wishing you the absolute best and a very happy birthday sir 🤗❤️ pic.twitter.com/aXtMzPTdzZ
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) October 12, 2024
சௌபின் சாகிர் மலையாள சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பினால் முத்திரை பதித்தவர். அந்த வகையில் கும்பலாங்கி நைட்ஸ் போன்ற படங்களில் இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் சௌபின் சாகிர் இன்று (அக்டோபர் 12) தனது 41வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.