ரஜினியின் வேட்டையன் பட வசூல் இரண்டே நாட்களில் 100 கோடியை கடந்துள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170 வது படமாக உருவாகி இருந்த வேட்டையன் திரைப்படம் சமீபத்தில் உலகம் முழுவதும் தமிழில், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் திரையிடப்பட்டது. இந்த படத்தினை டிஜே ஞானவேல் இயக்கியிருந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இந்த படத்தினை காண ரசிகர்கள் பலரும் திரையரங்கிற்கு திரண்டு வந்தனர். போலி என்கவுண்டர் குறித்தும் கல்வி முறையில் உள்ள ஓட்டைகள் குறித்தும் பேசியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதேசமயம் வழக்கம்போல் ரஜினி மாஸ் காட்டி இருப்பதாகவும் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்த அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, துஷாரா விஜயன் ஆகியோர் தூள் கிளப்பி உள்ளனர். எனவே இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் பட்டைய கிளப்பி வருகிறது. அதன்படி உலகம் முழுவதும் முதல் நாளில் 60 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருந்த வேட்டையன் திரைப்படம் இரண்டே நாட்களில் 100 கோடியை கடந்துள்ளது என புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. விரைவில் படக்குழு இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த படத்தினை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. அனிருத் இதற்கு இசையமைக்க கதிர் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.