spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா10 படம் தான் டைரக்ட் பண்ணுவேன், அப்புறம் அவ்ளோ தான்... அதிர்ச்சி கிளப்பிய லோகேஷ் கனகராஜ்!

10 படம் தான் டைரக்ட் பண்ணுவேன், அப்புறம் அவ்ளோ தான்… அதிர்ச்சி கிளப்பிய லோகேஷ் கனகராஜ்!

-

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் திரை உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர். இவர் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவரின் இயக்கத்தில் நடிப்பதற்கு பல நடிகர்கள் வரிசையில் நிற்கிறார்கள். மேலும் இவர் தமிழ் திரை உலகில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனராக உருவெடுத்துள்ளார்.

இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் திரை உலகில் எல்சி யூ என்ற கான்செப்ட்டை உருவாக்கியுள்ளார். ஹாலிவுட்டில் இருக்கும் மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ் போல தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த எல் சி யு விற்கு கீழ் வரும் திரைப்படங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக உருவாக்கப்படும்.
அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு கார்த்தியின் நடிப்பில் வெளிவந்த கைதி திரைப்படம் ஆரம்பப் புள்ளியாக அமைந்தது. அதன் பிறகு கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் ஆகும்.

we-r-hiring

விக்ரம் திரைப்படத்தில் கைதி படத்தின் கதைகளும் கதாபாத்திரங்களும் நுழைந்திருந்தன.

இந்த எல் சி யு விற்கு கீழ் வரும் திரைப்படங்கள் அனைத்தும் கைதி, விக்ரம் படத்தின் தொடர்ச்சியாகவே அமையும்.

எனவே லோகேஷ் கனகராஜ், விஜய் நடிப்பில் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் லியோ திரைப்படமும் இந்த எல் சி யு விற்கு கீழ் வருமா என்ற கேள்வி பலரிடைய நிலவி வருகிறது.
லியோ படம் குறித்து சமீப காலமாக பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அதன்படி லியோ படத்தில் கைதி மற்றும் விக்ரம் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் இணைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதனால் லியோ திரைப்படம் எல் சி யு விற்கு கீழ் வரும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக கருதப்படுகிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய லோகேஷ் கனகராஜ் “நான் நிறைய படங்கள் இயக்க வேண்டும். நீண்ட நாட்கள் இந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று எந்தத் திட்டமும் இல்லை. நான் இந்த யுனிவர்ஸ் கான்செப்டை முயற்சித்ததற்கு நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காரணம் அது அவ்வளவு எளிதாக நடந்து விடாது. என் ஓ சி வாங்க வேண்டும் என நிறைய குழப்பங்கள் இருக்கிறது. ஆனால் இந்த யுனிவர்சுக்கு கிடைக்கும் வரவேற்புக்கு நியாயம் சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் எல் சி யு வில் 10 படங்கள் இயக்கிவிட்டு அதிலிருந்து வெளியேறிவிடுவேன்.

மேலும் லியோ படம் நிறைவடைய இன்னும் பத்து நாட்கள் இருக்கிறது. விஜயுடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது இனிவரும் நாட்களில் மற்ற நடிகர்களுடன் படப்பிடிப்பு உள்ளது.

அடுத்ததாக லியோ படம் எல் சி யு விற்கு கீழ் வருமா என்பதை அறிய மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும் . ஜூன் 22, விஜய் பிறந்தநாளில் ‘நான் ரெடி’ பாடல் வெளியாவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு மற்றொரு சர்ப்ரைசும் காத்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ