மிகவும் எதிர்பார்க்கப்படும் லக்கி பாஸ்கர் படத்தில் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ள மலையாள நடிகர்களின் துல்கர் சல்மானும் ஒருவர். இவர் தற்போதைய ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் லக்கி பாஸ்கர் எனும் திரைப்படம் உருவாகி இருந்தது. இந்த படத்தை தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியிருந்தார். சித்தாரா என்டர்டெயின்மென்ட், பார்ச்சூன் போர் சினிமாஸ், ஸ்ரீஹரா ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இதில் துல்கர் சல்மான் தவிர ராம்கி, மீனாட்சி செளத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தன்று தமிழ் ,தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது. வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று கிட்டத்தட்ட 111 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இந்நிலையில் இந்த படம் வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.