spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅவர் மட்டும் எப்படி அதை பண்ணுகிறார்..... அனிருத் குறித்து பேசிய ஜிப்ரான்!

அவர் மட்டும் எப்படி அதை பண்ணுகிறார்….. அனிருத் குறித்து பேசிய ஜிப்ரான்!

-

- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் ட்ரெண்டிங் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் அனிருத். இவர் ஏகப்பட்ட படங்களில் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார். அதன்படி தளபதி 69, விடாமுயற்சி என பல பெரிய ஹீரோக்களின் படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.அவர் மட்டும் எப்படி அதை பண்ணுகிறார்..... அனிருத் குறித்து பேசிய ஜிப்ரான்!

கடந்த 2012 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி என்ற பாடலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அனிருத். அதைத் தொடர்ந்து இவர் ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்தது மட்டுமல்லாமல் சிறந்த இசையமைப்பாளருக்கான பல விருதுகளையும் அள்ளி இருக்கிறார். அதிலும் கடந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்திற்கு செம மாஸாக இசையமைத்து பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்றார். அதைத்தொடர்ந்து பாலிவுட்டிலும் ஷாருக்கானுக்கு ஜவான் படத்தில் இசையமைத்து மீண்டும் வெற்றி கண்டார். மேலும் ரஜினியே என்னுடைய படத்திற்கு அனிருத் தான் இசையமைக்க வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு பெயரையும் புகழையும் சேகரித்து வைத்துள்ளார் அனிருத். அவர் மட்டும் எப்படி அதை பண்ணுகிறார்..... அனிருத் குறித்து பேசிய ஜிப்ரான்!இந்நிலையில் தான் இசையமைப்பாளர் ஜிப்ரான் அனிருத் குறித்து பேசி உள்ளார். அவர் பேசியதாவது, “அனிருத் எப்படி பெரிய படங்களுக்கு மிகவும் அழுத்தமான இசையை கொடுக்கிறார் என்று தெரியவில்லை. ஏனென்றால் என்னால் அந்த அழுத்தத்தை சமாளிக்க முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ