Homeசெய்திகள்சினிமா100 கோடியை கடந்த மாதவன் - ஜோதிகா - அஜய் தேவ்கன் காம்போவின் சைத்தான்!

100 கோடியை கடந்த மாதவன் – ஜோதிகா – அஜய் தேவ்கன் காம்போவின் சைத்தான்!

-

கடந்த 2001 ஆம் ஆண்டு மாதவன், ஜோதிகா நடிப்பில் வெளியான படம் டும் டும் டும். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மாதவன், ஜோதிகா கூட்டணியில் சைத்தான் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. 100 கோடியை கடந்த மாதவன் - ஜோதிகா - அஜய் தேவ்கன் காம்போவின் சைத்தான்!சூப்பர்நேச்சுரல் திரில்லர் கதை களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் மாதவன் மற்றும் ஜோதிகாவுடன் இணைந்து அஜய் தேவ்கன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தியில் உருவாகியுள்ள இந்த படத்தை விகாஸ் பாஹ்ல் இயக்கியுள்ளார். தேவ்கன் பிலிம்ஸ் மற்றும் பனோரமா ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. சுதாகர் ரெட்டி யகந்தி இதற்கு ஒளிப்பதிவு செய்ய அமித் திரிவேதி இசை அமைத்துள்ளார். 100 கோடியை கடந்த மாதவன் - ஜோதிகா - அஜய் தேவ்கன் காம்போவின் சைத்தான்!இந்தப் படம் கடந்த மார்ச் 8ம் தேதி வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்டு வருகிறது. அதன்படி மூன்று நாட்களில் 80 கோடியை வசூல் செய்த இந்த படம் 5 நாட்களில் 100 கோடி வசூலை கடந்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாடுகளில் இந்த படம் 20 கோடி வரை வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்களினால் இனிவரும் நாட்களிலும் இந்த படம் அதிக வசூலை பெற்று தரும் என்று நம்பப்படுகிறது.

MUST READ