அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தை தடம், தடையறத் தாக்க உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமடைந்த மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அஜர்பைஜானில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதன் பின்னர் அங்கு ஏற்பட்ட பருவநிலை மாற்றத்தால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த கட்ட படப்பிடிப்பு மார்ச் 15ஆம் தேதி தொடங்க இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நடிகர் அஜித்துக்கு மூளைக்கும் காதுக்கும் இடையில் உள்ள நரம்பில் வீக்கம் ஏற்பட்ட காரணத்தால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்கு பின் நலமுடன் வீடு திரும்பினார்.
எனவே அஜித் விரைவில் விடாமுயற்சி படப்பிடிப்பில் இணைவார் என்றும் ஏற்கனவே வெளியான தகவலின் படி மே மாதம் இந்த படம் வெளியாகும் என்றும் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். ஆனால் கிட்டத்தட்ட இன்னும் 70 நாட்கள் படப்பிடிப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஒருமுறை எடுக்கப்பட்ட காட்சி சரியாக வராத காரணத்தினால் மீண்டும் மீண்டும் அதே காட்சியை அங்கு நாட்களாக எடுத்து வருகிறாராம் மகிழ் திருமேனி. இதன் காரணமாக தான் விடாமுயற்சி படப்பிடிப்பு நிறைவடையாமல் இன்னும் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.
பெரிய நடிகரான அஜித்தை வைத்து படம் இயக்குவதால் அதில் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் படம் நன்றாக வர வேண்டும் என்பதற்காகவும் தான் மகிழ் திருமேனி இப்படி செய்கிறார் என்று ஒரு தரப்பில் கூறப்பட்டாலும், கூடுதல் கவனம் வினையாக முடிந்துவிடும் என்றும் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் மகிழ் திருமேனி எப்போது விடாமுயற்சி படத்தை முடிப்பார்? எப்போது படம் வெளியாகும்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- Advertisement -