Homeசெய்திகள்சினிமாசீன மொழியில் வெளியான 'மகாராஜா'.... வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்!

சீன மொழியில் வெளியான ‘மகாராஜா’…. வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்!

-

மகாராஜா படக்குழுவினருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.சீன மொழியில் வெளியான 'மகாராஜா'.... வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்!

கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி , சாச்சனா,நட்டி நடராஜ் ,சிங்கம்புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க குரங்கு பொம்மை படத்தின் இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இதனை இயக்கியிருந்தார். அஜனிஸ் லோக்நாத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். வித்தியாசமான கதைக்களத்தில் வெளியாகி இருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

இன்றுவரையிலும் பேசப்படும் இந்த படமானது இன்று (நவம்பர் 29) சீனாவில் வெளியாகி இருக்கிறது. எனவே இதற்காக நடிகர் சிவகார்த்திகேயன், மகாராஜா படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மகாராஜா படத்தில் இந்த சாதனையை நினைத்து பெருமைப்படுகிறேன். மேலும் இந்த படம் சீனாவிலும் வெற்றி பெறும் என நம்புகிறேன். நித்திலன் சாமிநாதன், விஜய் சேதுபதி ஆகிய படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ