Homeசெய்திகள்சினிமாவிக்ரமின் வீர தீர சூரன் 2... படத்தில் இணைந்த மலையாள பிரபலம்...

விக்ரமின் வீர தீர சூரன் 2… படத்தில் இணைந்த மலையாள பிரபலம்…

-

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பதில் புகழ் பெற்றவர் நடிகர் விக்ரம். இவர் தற்போது இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதைத் தொடர்ந்து விக்ரம் 62-வது படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை அருண் குமார் இயக்கி இருக்கிறார். இவர், பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா ஆகிய படங்களை இயக்கி புகழ்பெற்றவர்.

இப்படத்தின் டைட்டில் டீசர் ஏற்கனவே வெளியாகி வைரலானது. படத்திற்கு வீர தீர சூரன் என்று தலைப்பு வைத்துள்ளனர். முதலில் படத்தின் இரண்டாம் பாகத்தை வௌியிடுகின்றனர். படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். படத்தை ரியா தயாரிக்கிறார். மேலும், படத்தில் விக்ரமுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா, சூரஜ், துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் சித்திக்கும் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மலையாள படங்களில் அதிகம் நடித்துள்ள சித்திக், இதற்கு முன்பாக தமிழில் வெந்து தணிந்தது காடு, வரலாறு முக்கியம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ