மம்மூட்டி, கௌதம் மேனன் கூட்டணியின் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கௌதம் வாசுதேவ் மேனன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர். தற்போது இவர் பல படங்களில் நடித்தும் வருகிறார். இதற்கிடையில் இவர் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளை முன்னணியாக கொண்டு புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தை பிரபல நடிகர் மம்மூட்டி தானே தயாரித்து நடித்து வருகிறார். இந்த படத்திற்கு டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இந்த படத்தில் இருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் ரிலீஸ் செய்தியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்க விஷ்ணு ஆர் தேவ் ஒளிப்பதிவு செய்கிறார். அந்தோணி இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். அடுத்தது இந்த படத்தில் மம்மூட்டியுடன் இணைந்து சுஷ்மிதா பட், கோகுல் சுரேஷ், விஜி வெங்கடேஷ், வினித், விஜய் பாபு மற்றும் பலர் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -