கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
கௌதம் வாசுதேவ் மேனன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர். விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு என பல வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் கௌதம் மேனன். இருப்பினும் விக்ரம் நடிப்பில் இவர் இயக்கியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் தவிர்க்க முடியாத சில காரணங்களால் ரிலீஸ் செய்யப்படாமல் இன்னும் நிலுவையில் இருந்து வருகிறது. அதேசமயம் இவர் இயக்கியிருந்த ஜோஸ்வா இமைபோல் காக்க திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்ததாக கௌதம் மேனன் தனது தாய் மொழியான மலையாளத்தில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் மம்மூட்டி கதாநாயகனாக நடித்து வருவதோடு மட்டுமல்லாமல் படத்தினையும் தயாரித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் மம்மூட்டியுடன் இணைந்து நடிகை சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் பூஜையுடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இதன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படமானது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வருவதால் படத்திற்கு மிஸ்டர் டிடக்ட் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. எனவே இந்த தலைப்பின் மூலம் படமானது துப்பறியும் கதைக்களத்தில் உருவாகி வருவதாக தெரியவந்துள்ளது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.