Homeசெய்திகள்சினிமா'தக் லைஃப்' படத்தின் ஸ்கிரிப்ட்டை மாற்றிய மணிரத்னம்!

‘தக் லைஃப்’ படத்தின் ஸ்கிரிப்ட்டை மாற்றிய மணிரத்னம்!

-

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் பாகம் 1, 2 ஆகியவை வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. 'தக் லைஃப்' படத்தின் ஸ்கிரிப்ட்டை மாற்றிய மணிரத்னம்!அதைத் தொடர்ந்து மணிரத்னம் , கமல்ஹாசன் நடிப்பில் தக் லைஃப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டு சென்னை, செர்பியா, ராஜஸ்தான், புது டெல்லி போன்ற பல இடங்களில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படமானது இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. 'தக் லைஃப்' படத்தின் ஸ்கிரிப்ட்டை மாற்றிய மணிரத்னம்!இந்த படத்தில் ஏற்கனவே கமல்ஹாசன் உடன் இணைந்து ஜெயம் ரவி, துல்கர் சல்மான், திரிஷா, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. பின்னர் ஒரு சில காரணங்களால் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் ஆகிய இருவரும் படத்திலிருந்து வெளியேறினர். அதைத் தொடர்ந்து நடிகர் சிம்புவும் அசோக் செல்வனும் களத்தில் இறங்கியுள்ளனர்.
'தக் லைஃப்' படத்தின் ஸ்கிரிப்ட்டை மாற்றிய மணிரத்னம்!சிம்பு, துல்கர் சல்மானுக்கு பதிலாகவும் அசோக்செல்வன், ஜெயம் ரவிக்கு பதிலாகவும் தக் லைஃப் படத்தில் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. ஆனால் இயக்குனர் மணிரத்னம் துல்கர் சல்மான், ஜெயம் ரவி இருவரும் வெளியேறிய பின் அவர்களின் கதாபாத்திரங்களை ஸ்கிரிப்ட்லிருந்து தூக்கி விட்டாராம். மேலும் அவர் புதிய ஸ்கிரிப்ட்டை தயார் செய்துள்ளதாகவும் இந்த புதிய ஸ்கிரிப்ட் படி கமல்ஹாசன் மற்றும் சிம்புவை மையமாக வைத்து தான் கதை நகர்கிறது எனவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடிகர் சிம்பு இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு மகனாக நடித்து வருகிறார் சொல்லப்படுகிறது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ