மணிகண்டன் நடிப்பில் உருவாகி வரும் லவ்வர் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் மணிகண்டன். இப்படத்தை தொடர்ந்து இவர், விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் குட் நைட் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். குறட்டை என்ற கான்செப்ட்டை மையமாக வைத்து வெளியான இந்த படம் மாபெரும் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது. இப்படத்தில் நடிகர் மணிகண்டன் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அடுத்ததாக மணிகண்டன் நடிப்பில் லவ்வர் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை பிரபு ராம் வியாஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து கண்ணா ரவி, ஹரிஷ் குமார், கீதா கைலாசம், சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பாக லவ்வர் படத்தின் டீசரும் அதைத் தொடர்ந்து பாடல்களும் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் தற்போது படத்தின் டிரைலரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஆறு வருடங்களாக காதலிக்கும் காதலர்களின் வாழ்வில் ஏற்படும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள லவ்வர் திரைப்படம் இந்த ஆண்டின் சிறந்த படங்களில் இடம் பிடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் இப்படம் வருகின்ற பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.