spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவசூலை வாரி குவித்த 'மஞ்சும்மெல் பாய்ஸ்'.... ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வசூலை வாரி குவித்த ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’…. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

- Advertisement -

மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.வசூலை வாரி குவித்த 'மஞ்சும்மெல் பாய்ஸ்'.... ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படத்தை மலையாள இயக்குனர் சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கியிருந்தார். இந்த படத்தில் சௌபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி, லால் ஜூனியர், பாலு வர்கீஸ் உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியானது. கொடைக்கானலில் உள்ள குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து வெளியான இந்த படம் கேரளாவை தாண்டி தமிழ்நாட்டிலும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று குறைந்த நாட்களில் அதிக வசூலை பெற்று தந்தது. அந்த வகையில் தமிழகத்தில் மட்டுமே 60 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. உலக அளவில் 200 கோடியை கடந்து வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை திரை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இன்றுவரையிலும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகி இருக்கிறது. மேலும் இந்த படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது.வசூலை வாரி குவித்த 'மஞ்சும்மெல் பாய்ஸ்'.... ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! இந்நிலையில் இப்படம் வருகின்ற மே 3ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ