spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் உருவாகும் 'மார்கழி திங்கள்'.... ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் உருவாகும் ‘மார்கழி திங்கள்’…. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

- Advertisement -

மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் மார்கழி திங்கள் திரைப்படம் உருவாகி வருகிறது. மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகியுள்ள இந்த படத்தில் பாரதிராஜா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அறிமுக நடிகர்களான சாம் செல்வன் மற்றும் ரக்ஷனா இருவரும் பாரதிராஜா உடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் சுசீந்திரன் இதில் வில்லனாக நடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் இயக்குனர் சுசீந்திரன் தான் இப்படத்தை வெண்ணிலா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார். இளையராஜா இதற்கு இசை அமைத்துள்ளார். சாம் செல்வனுக்கும் ரக்ஷனாவிற்கும் பள்ளி பருவத்தில் ஏற்படும் காதலை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் அடுத்தடுத்து வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளியாக இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது இப்படம் வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

MUST READ