spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகவனம் ஈர்க்கும் மனோஜ் பாரதிராஜாவின் 'மார்கழி திங்கள்' டீசர்!

கவனம் ஈர்க்கும் மனோஜ் பாரதிராஜாவின் ‘மார்கழி திங்கள்’ டீசர்!

-

- Advertisement -

மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் மார்கழி திங்கள் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் மூலம் மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தை இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இளையராஜா இதற்கு இசை அமைத்துள்ளார். இதில் அறிமுக நடிகர்களான சாம் செல்வன் மற்றும் ரக்ஷனா இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டு பழனி பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதைத் தொடர்ந்து படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. மேலும் இந்த டீசரில் விரைவில் இப்படம் வெளியாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ