spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎன்னை நம்பி வந்தா அவரோட நம்பிக்கையை காப்பாத்துவேன்.... ரஜினி குறித்து மாரி செல்வராஜ்!

என்னை நம்பி வந்தா அவரோட நம்பிக்கையை காப்பாத்துவேன்…. ரஜினி குறித்து மாரி செல்வராஜ்!

-

- Advertisement -

இயக்குனர் மாரி செல்வராஜ், ரஜினி குறித்து பேசி உள்ளார்.என்னை நம்பி வந்தா அவரோட நம்பிக்கையை காப்பாத்துவேன்.... ரஜினி குறித்து மாரி செல்வராஜ்!

இயக்குனர் மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை ஆகிய படத்தின் மூலம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பைசன் காளமாடன் படமும் வெற்றி நடைபோட்டு வருகிறது. துருவ் விக்ரம் நடிப்பில் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் பல்வேறு தரப்பினரிடைய பாராட்டுகளை பெற்று வருகிறது. இதன் பின்னர் மாரி செல்வராஜ், தனுஷ் நடிப்பில் D56 படத்தை இயக்க உள்ளார். என்னை நம்பி வந்தா அவரோட நம்பிக்கையை காப்பாத்துவேன்.... ரஜினி குறித்து மாரி செல்வராஜ்!மேலும் கார்த்தி நடிப்பில் புதிய படம் ஒன்றையும், இன்பநதி நடிப்பில் புதிய படம் ஒன்றையும் இயக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இவர், ரஜினியிடம் கதை சொன்னதாக ஏற்கனவே தகவல் கசிந்து இருந்தது. எனவே ரஜினி – மாரி செல்வராஜ் கூட்டணியில் புதிய படம் எப்போது உருவாகும்? என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பைசன் படம் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது மாரி செல்வராஜிடம், ரஜினியை இயக்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

we-r-hiring

அப்போது மாரி செல்வராஜ், “நான் பலமுறை ரஜினியை சந்தித்து பேசியிருக்கிறேன். என்னுடைய எல்லா படங்களையும் அவர் பாராட்டி இருக்கிறார். என்னுடைய படைப்பு இப்படி தான் இருக்கும், என்னுடைய கதைகள் இப்படித்தான் இருக்கும் என்று என்னை நம்பி வந்தா அவருடைய நம்பிக்கையை காப்பாற்றுவேன்” என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ