நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன் உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க மகிழ் திருமேனி இதனை இயக்கி வருகிறார். மேலும் இந்த படமானது தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதைத் தொடர்ந்து நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்க இருக்கிறார். இந்த படமானது பான் இந்திய அளவில் 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி எதிர்பார்ப்பை தூண்டியது. அதே சமயம் இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 ஜூன் மாதத்தில் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்பானது அறிவித்த தேதிக்கு முன்னதாகவே வருகின்ற மே 10 அன்று ஐதராபாத்தில் தொடங்க இருக்கிறது. அஜித் இந்த படத்தில் மூன்று விதமான தோற்றத்தில் நடிக்க இருக்கிறாராம். அதேசமயம் இந்த படத்தில் தெலுங்கு நடிகை ஸ்ரீலிலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். அதைத்தொடர்ந்து பாபி தியோல் இதில் வில்லனாக நடிப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ் ஜே சூர்யா ஏற்கனவே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.