இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தரின் 95-வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு சென்னையில் மரியாதை செய்யப்பட்டது.சென்னை, ஆழ்வார்பேட்டை, லஸ் சர்ச் சாலையில் அமைத்துள்ள, இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் போக்குவரத்து தீவு என்னும் இடத்தில் கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம் சார்பாக மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு கலந்து கொண்டு கே.பாலச்சந்தரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார், இதில் வெள்ளித் திரை மற்றும் சின்னத்திரைத் துறையினர் பல கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, மறந்து விடுவது மக்களின் பண்பாக இருக்கும் போது, நினைவுபடுத்துவது நம்முடைய கடமை எனும் அடிப்படையில், தமிழக முதலமைச்சர் இயக்குனர் சிகரத்திற்கு மரியாதை செய்துள்ளதாக கூறினார். இன்றைய இளைஞர்களும் கே.பாலச்சந்தரை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கடந்த வருடம், “இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் போக்குவரத்து தீவை” பாலசந்தர் வசித்த பகுதியில் திறந்து வைத்ததை வேலு சுட்டிக்காட்டினார்.

கே.பாலச்சந்தர் நினைவை போற்றும் வகையில் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளதை அவர் குறிப்பிட்டார். தற்போது சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களை அறிமுகப்படுத்தியவர் கே.பி. எனும் கே.பாலசந்தர், சினிமா மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் தடம் பதித்தவர் என்று புகழந்துரைத்த மயிலை வேலு, இயக்குனர் சிகரத்தின் நினைவு போற்றுவோம் என தெரிவித்துள்ளாா்.
சத்துணவு அமைப்பாளர் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்-அன்புமணி வலியுறுத்தல்