விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக ரோமியோ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதேசமயம் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் வள்ளி மயில் போன்ற பல படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. அந்த வகையில் விஜய் ஆண்டனி மழை பிடிக்காத மனிதன் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். காதல், தீபாவளி, கோலி சோடா போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்த விஜய் மில்டன் படத்தை இயக்கியுள்ளார். ராஜாமணி, விஜய் ஆண்டனி ஆகியோர் இணைந்து படத்திற்கு இசை அமைக்க இயக்குனர் விஜய் மில்டன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. விஜய் ஆண்டனி உடன் இணைந்து சரத்குமார், மேகா ஆகாஷ், சரண்யா பொன்வண்ணன், ரமணா, முரளி சர்மா, தலைவாசல் விஜய் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக டப்பிங் பணிகள் நிறைவடைந்தன. அதைத்தொடர்ந்து இந்த படத்தின் டீசரும் வெளியாகி கவனம் பெற்றது. இதன் தீரா மழை எனும் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படமானது விரைவில் வெளியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வந்தனா இந்த பாடல் வரிகளை எழுதியுள்ள நிலையில் சௌரவ் ராய் பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.