விஜய் சேதுபதி-கேத்ரினா பட ரிலீஸில் மாற்றம்
இயக்குனர் ஸ்ரீ ராம் ராகவன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் “மெர்ரி கிறிஸ்துமஸ்”. இத்திரைப்படம் விஜய் சேதுபதி மற்றும் பிரபல பாலிவுட் நடிகை கேத்ரினா நடிப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் கிறிஸ்துமஸ் விருந்தாக டிசம்பர் 23ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

ஆனால் தற்போது தினத்தில் ஷாருக்கானின் டன்கி மற்றும் பிரபாஸின் சலார் ஆகிய திரைபடங்கள் வெளியாக உள்ள நிலையில், மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தின் வெளியீடு தேதி மாற்றப்பட்டுள்ளது.இந்த படம் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே திரையிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் சேதுபதியின் பாலிவுட் நடிப்பின் முதல் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.