பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு சென்னை 600028, கோவா, சரோஜா, மங்காத்தா உள்ளிட்ட பல படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவரது இயக்கத்தில் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இதற்கிடையில் இவர் நண்பன் ஒருவன் வந்த பிறகு எனும் திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தை மீசைய முறுக்கு படத்தில் நடித்திருந்த ஆனந்த் எழுதி இயக்கியிருக்கிறார். ஏ.ஹெச். காசிப் இந்த படத்திற்கு இசையமைக்க தமிழ்ச்செல்வன் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். நட்பு என்பதை மையமாக வைத்து உருவாகியிருந்த இந்த படத்தில் ஆர் ஜே விஜய், இர்ஃபான், KPY பாலா பவானி ஸ்ரீ, குமரவேல், மோனிகா, லீலா, வினோத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி திரைக்கு வந்த நிலையில் தொடர்ந்து பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. எனவே இது தொடர்பாக நடிகர் மிர்ச்சி சிவா வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
Actor shiva bro about #NOVP movie..⭐ pic.twitter.com/9exd57xA1Z
— Laxmi Kanth (@iammoviebuff007) August 7, 2024
அந்த வீடியோவில், “நண்பன் ஒருவன் வந்த பிறகு என்ற டைட்டிலை கேட்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கிறது. நண்பன் இருந்தால் போதும் வாழ்க்கையில் என்ன வேண்டும் என்றாலும் சாதிக்கலாம் என்பது போன்ற டைட்டில் இது. சென்னை 600028 படத்தின் வைப் இந்த படத்தில் இருக்கும். நிச்சயம் அதை நீங்கள் உணர்வீர்கள். இந்த படம் ரிலீஸ் ஆகி நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. உங்கள் நண்பர்களுடன் சென்று படத்தை பார்த்து ரசியுங்கள். படத்தில் நடித்தவர்களுக்கும் மற்ற பட குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.