spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇந்த தடவை மிஸ் ஆகாது.... கிடப்பில் போடப்பட்ட சிவாவின் 'சுமோ'.... முக்கிய அறிவிப்பு!

இந்த தடவை மிஸ் ஆகாது…. கிடப்பில் போடப்பட்ட சிவாவின் ‘சுமோ’…. முக்கிய அறிவிப்பு!

-

- Advertisement -

சுமோ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த தடவை மிஸ் ஆகாது.... கிடப்பில் போடப்பட்ட சிவாவின் 'சுமோ'.... முக்கிய அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் மிர்ச்சி சிவா வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028, சரோஜா போன்ற படங்களின் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சையமானவர். அதே சமயம் இவருடைய நடிப்பில் வெளியான தமிழ் படம், கலகலப்பு ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. கடைசியாக இவர் நடிப்பில் சூது கவ்வும் 2 திரைப்படம் வெளியானது. அடுத்தது இவர், இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பறந்து போ எனும் திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.இந்த தடவை மிஸ் ஆகாது.... கிடப்பில் போடப்பட்ட சிவாவின் 'சுமோ'.... முக்கிய அறிவிப்பு! இதற்கிடையில் இவர் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள சுமோ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை எஸ்.பி. ஹோசிமின் இயக்கியிருக்கிறார். ராஜீவ் மேனன் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க நிவாஸ் கே பிரசன்னா இதற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் மிர்ச்சி சிவாவுடன் இணைந்து பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, விடிவி கணேஷ், நிழல்கள் ரவி, சதீஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் படமானது நீண்ட நாட்களாக ரிலீஸ் செய்யப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது.

we-r-hiring

அதேசமயம் பலமுறை இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இப்படம் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சுமோ படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று (ஏப்ரல் 4) மாலை 5 மணி அளவில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். அதன்படி இது ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ