Homeசெய்திகள்சினிமாதமிழில் டப் செய்யப்பட்ட மோகன்லாலின் 'துடரும்'.... வைரலாகும் ட்ரெய்லர்!

தமிழில் டப் செய்யப்பட்ட மோகன்லாலின் ‘துடரும்’…. வைரலாகும் ட்ரெய்லர்!

-

- Advertisement -

தமிழில் டப் செய்யப்பட்ட மோகன்லாலின் துடரும் படத்தின் ட்ரைலர் இணையத்தில் வைரலாகி உள்ளது.தமிழில் டப் செய்யப்பட்ட மோகன்லாலின் 'துடரும்'.... வைரலாகும் ட்ரெய்லர்!

மலையாள சினிமாவில் மிகப்பெரிய நடிப்பு ஜாம்பவானாக வலம் வருபவர் நடிகர் மோகன்லால். இவரது நடிப்பில் கடைசியாக எம்புரான் திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இது தவிர மோகன்லால் வ்ருஷபா, ராம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளது. இந்நிலையில் தான் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி மோகன்லால் நடிப்பில் ‘துடரும்’ எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை தருண் மூர்த்தி இயக்கி இருந்தார். ஷோபனா இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வசூலையும் வாரி குவித்து வருகிறது. அதாவது எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெளியான இந்த படம் கேரளாவை தாண்டி தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் கிட்டத்தட்ட ரூ. 120 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

மேலும் இந்த படமானது தமிழில் ‘தொடரும்’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு தயாராகியுள்ளது. இது வருகின்ற மே 9ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இதன் தமிழ் டிரைலரை படக்குழு வெளியிட்டு இருக்கும் நிலையில் இந்த ட்ரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இப்படத்தை ரெஜபுத்ரா விஷுவல் மீடியா நிறுவனம் தயாரிக்க சஜி குமார் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ