Homeசெய்திகள்சினிமா'மூக்குத்தி அம்மன் 2' படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.... முதல் காட்சியை படமாக்கிய படக்குழு!

‘மூக்குத்தி அம்மன் 2’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது…. முதல் காட்சியை படமாக்கிய படக்குழு!

-

- Advertisement -

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.'மூக்குத்தி அம்மன் 2' படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.... முதல் காட்சியை படமாக்கிய படக்குழு!

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வேல்ஸ் ஃபிலிம் நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த 2020இல் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இதன் மாபெரும் வெற்றிக்கு பிறகு மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தினை இயக்கத் திட்டமிட்டார் வேல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஐசரி கணேஷ். அதன்படி மீண்டும் அம்மனாக மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் களமிறங்கியுள்ளார் நயன்தாரா. ஆனால் ஆர்.ஜே பாலாஜிக்கு பதிலாக இந்த படத்தை சுந்தர். சி இயக்குகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று (மார்ச் 6) பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது.

இந்த பூஜையில் நடிகை நயன்தாரா, சுந்தர்.சி ,குஷ்பூ, மீனா போன்ற பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த படத்தின் பூஜை விழாவில் இப்படத்தின் முதல் காட்சியையும் படக்குழு படமாக்கி உள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த படத்தில் நடிகை நயன்தாராவுடன் இணைந்து யோகி பாபு, ரெஜினா மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ