முகேஷ் அம்பானி வீட்டு வீசேஷத்தில் திரைப்பிரபலங்கள்
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானி தங்கள் அன்டிலியா இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை கோலாகலமாக கொண்டாடினர்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி நடைபெற்ற கணபதி பூஜைக்கு, பாலிவுட், கோலிவுட் மற்றும் கிரிக்கெட் பிரபலங்களை அழைத்தனர். அம்பானியின் அழைப்பை ஏற்று, ஷாருக்கான் தனது மனைவி கவுரி கான், மகள் சுஹானா கான், மகன் அபிராம் மற்றும் மாமியாருடன் பூஜையில் கலந்துகொண்டார். ஷாருக்கானின் மூத்த மகன் மட்டும் பூஜைக்கு வரவில்லை.
இதேபோல் தமிழ் திரையுலக பிரபங்களில் அட்லி- பிரியா, நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதிகள் கணபதி பூஜையில் கலந்துகொண்டனர். இரு ஜோடிகளின் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகிவருகிறது. இதுமட்டுமின்றி, சல்மான் கான், அஜய் தேவ்கன், ரித்தேஷ் தேஷ்முக், நடிகை ரேகா, ரன்வீர் சிங், ஹேமமாலினி, தீபிகா படுகோன், ஜெனிலியா, அனன்யா பாண்டே, கரீஷ்மா கபூர், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். கிரிக்கெட் வீரர்கள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ஜவான், மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மகன் ஆதித்யா தாக்கரே உள்ளிட்டோர் கணபதி பூஜையில் கலந்துகொண்டனர்.