Homeசெய்திகள்சினிமாகானா பாடலின் தந்தை, தேனிசைத் தென்றல் தேவாவின் பிறந்தநாள் இன்று!

கானா பாடலின் தந்தை, தேனிசைத் தென்றல் தேவாவின் பிறந்தநாள் இன்று!

-

- Advertisement -
kadalkanni

தேனிசைத் தென்றல் தேவாவின் பிறந்தநாள் இன்று.கானா பாடலின் தந்தை, தேனிசைத் தென்றல் தேவாவின் பிறந்தநாள் இன்று!

90ஸ் கிட்ஸ்களுக்கு கானா பாடல்களைப் பாடி கொண்டாட வேண்டும் என்றாலும், மனம் உருக வைக்கும் காதல் பாடல்கள் கேட்க வேண்டும் என்றாலும் அவர்களின் மனதில் தோன்றுவது தேனிசை தென்றல் தேவாவின் இசைதான். அந்தளவிற்கு தேவாவின் பாடல்கள் பல்வேறு ரசிகர்களின் ப்ளே லிஸ்டில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும். 2k கிட்ஸ் கூட இவருடைய குரலில் கானா பாடல்களை கொண்டாடுவார்கள். கானா பாடலின் தந்தை, தேனிசைத் தென்றல் தேவாவின் பிறந்தநாள் இன்று!அதே சமயம் நாம் அடிக்கடி முணுமுணுக்கும் பல மெல்லிசை பாடல்களும் இவருடைய மெட்டில் உருவானவை என்பதை அறியாமலே கொண்டாடிக் கொண்டிருப்போம். அந்த அளவுக்கு மெலோடியிலும் தலைவர் வேற ரகம். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். அன்று முதல் இன்று வரை நாம் கொண்டாடி தீர்க்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் டைட்டில் கார்டு மியூசிக் கூட இவரது இசை ஜாலத்தில் உருவானதே. அடுத்தது இவருடைய இசையில் உருவான பாடல்கள் இல்லாத எந்த ஒரு திருவிழாவும் கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். கோயில் திருவிழாவாக இருந்தாலும் சரி, கல்யாண வீட்டு விசேஷமாக இருந்தாலும் சரி தேவாவின் பாடல் அனைவரையும் உற்சாகத்தில் கொண்டாட வைத்து விடும். கானா பாடலின் தந்தை, தேனிசைத் தென்றல் தேவாவின் பிறந்தநாள் இன்று!இன்றைக்கும் கூட பல பேருந்துகளில் தேவாவின் பாடல்கள் ஒலிக்க அதை நாமும் மெய் மறந்து நம்மை அறியாமல் முணுமுணுப்போம். சமீபத்தில் வெளியான லப்பர் பந்து படத்தில் கூட ‘ராசி தான் கைராசி தான்’ எனும் பாடல் பேருந்தில் ஒலிக்கும். அப்போது பயணியர் ஒருவர் இளையராஜா இளையராஜா தான் என்று சொல்வார். உடனே மற்றொருவர் இளையராஜா இளையராஜா தான். ஆனால் அது தேவா பாடல் என்பார். இப்படி பலரும் பட்டிதொட்டி எங்கும் தன் பெருமைகளை பேச வைத்த தேவாவின் 74 ஆவது பிறந்தநாள் இன்று (நவம்பர் 20). இந்நாளில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் நாமும் அவரை வாழ்த்தி மகிழ்வோம்.

MUST READ