spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎன் அன்பு தாய் ஐஸ்வர்யா..... லால் சலாம் வெற்றியடைய இறைவனை வேண்டுகிறேன்..... ரஜினி ட்வீட்!

என் அன்பு தாய் ஐஸ்வர்யா….. லால் சலாம் வெற்றியடைய இறைவனை வேண்டுகிறேன்….. ரஜினி ட்வீட்!

-

- Advertisement -

என் அன்பு தாய் ஐஸ்வர்யா..... லால் சலாம் வெற்றியடைய இறைவனை வேண்டுகிறேன்..... ரஜினி ட்வீட்!ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஏற்கனவே தனுஷ் நடிப்பில் 3, கௌதம் கார்த்திக் நடிப்பில் வை ராஜா வை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். அதைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோரின் நடிப்பில் லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் ரஜினி, மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இதில் ரஜினிக்கு ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார். மேலும் லால் சலாம் திரைப்படமானது கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களம் என்பதால் பிரபல கிரிக்கெட் வீரர் கபில்தேவ் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் இந்த படத்தை தயாரிக்க இசையப்புயல் ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைத்துள்ளார்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் திரைப்படம் இன்று (பிப்ரவரி 9) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இந்நிலையில் லால் சலாம் திரைப்படம் வெற்றி அடைய இறைவனை வேண்டிக் கொள்வதாக நடிகர் ரஜினி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “என் அன்புத் தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என்று தனது மகள் ஐஸ்வர்யாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு இந்த பதிவினை வெளியிட்டுள்ளார் ரஜினி.

MUST READ