நானி நடிக்கும் சூர்யாவின் சனிக்கிழமை படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.
நடிகர் நானி தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். இவர் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் நல்ல கதையம்சம் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். அந்த வகையில் கடந்த ஆண்டு நானி நடிப்பில் ஹாய் நான்னா திரைப்படம் வெளியானது. நல்ல ஒரு பீல் குட் பொழுதுபோக்கு படமாக வெளியான இந்த படம் 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதைத் தொடர்ந்து நானி, தனது 31 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை விவேக் ஆத்ரேயா இயக்குகிறார். தெலுங்கில் சரிபோதா சனிவாரம் என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 2024 ஆகஸ்ட் 29ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டிவிவி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இந்த படமானது ஜேக்ஸ் பிஜாயின் இசையிலும் ஜி முரளியின் ஒளிப்பதிவிலும் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரிலீஸ் தேதியில் அறிவிக்கப்பட்ட நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பாக இந்த படத்தின் கரம் கரம் எனும் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலானது.
தெலுங்கு மொழியில் மட்டுமே வெளியான இந்த பாடல் தற்போது மற்றும் மொழிகளிலும் வெளியாகி உள்ளது. எனவே இந்த பாடல் தெலுங்கு மொழியில் நல்ல வரவேற்பை பெற்றது போல் மற்ற மொழிகளிலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.