ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் பிரதர் திரைப்படம் வருகின்ற அக்டோபர் 31ஆம் நாளில் தீபாவளி தினத்தன்று திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். அக்காவாக பூமிகா சாவ்லா நடித்துள்ளார். மேலும் நட்டி நட்ராஜ், வி டிவி கணேஷ், சரண்யா பொன்வண்ணன், சீதா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஸ்க்ரீன் சீன் மீடியா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். எம் ராஜேஷ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.
அக்கா – தம்பி உறவை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நட்டி நட்ராஜ் ஜெயம் ரவி குறித்தும் பிரதர் படம் குறித்தும் பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது, “பிரதர் படத்தின் கதையை சொல்லும் போதே எனக்கு ரொம்ப பிடித்தது. குடும்ப கதையில் இந்த படத்தை ராஜேஷ் சார் அழகாக சொல்லி இருக்கிறார். ஜெயம் ரவி இந்த படத்தில் பட்டாசு மாதிரி வெடிச்சிருக்காரு. சந்தோஷ் சுப்பிரமணியம் கேரக்டருக்கும் கார்த்திக் கேரக்டருக்கும் வித்தியாசம் இருக்கு. அவ்ளோ அழகா நடிச்சிருக்காரு. பூமிகா மேடம் அருமையாக நடிச்சிருக்காங்க. இந்த படம் நல்ல ஒரு பீல் குட் படமாக உருவாகி இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -