spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஃபர்ஸ்ட் பர்த்டே ஸ்பெஷல்..... இரட்டைக் குழந்தைகளின் முகத்தை காட்டிய நயன் - விக்கி!

ஃபர்ஸ்ட் பர்த்டே ஸ்பெஷல்….. இரட்டைக் குழந்தைகளின் முகத்தை காட்டிய நயன் – விக்கி!

-

- Advertisement -

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் முதன்முதலாக தங்களின் குழந்தைகளின் முகத்தை வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் திருமணம் செய்து கொண்ட நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் நான்கு மாதங்களில் வாடகைத்தாயின் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தனர். அதைத்தொடர்ந்து தனது மகன்களுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வீக் N சிவன் என்று பெயர் சூட்டினார்.

we-r-hiring

அதன் பிறகு அடிக்கடி குழந்தைகளோடு இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். ஆனால் இதுவரை குழந்தைகளின் முகத்தை காட்டியதில்லை.

சமீபத்தில் கூட நயன்தாரா இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கை தொடங்கி தன் இரு மகன்களுடன் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதிலும் குழந்தைகளின் முகத்தை சரியாக காட்டவில்லை. நயன்தாரா விக்னேஷ் சிவனின் குழந்தைகளின் முகத்தை பார்ப்பதற்கு பலரும் ஆர்வமாக இருந்தனர்.

இந்நிலையில் தற்போது குழந்தைகளின் முதல் பிறந்த நாளை முன்னிட்டு நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தங்கள் குழந்தைகளின் முகத்தை வெளிக்காட்டி உள்ளனர். ஜெயிலர் படத்தின் ரத்தமாரே பாடல் வரிகளில் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

MUST READ