நடிகர் யாஷ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே ஜி எஃப் படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் கே ஜி எஃப் 2ஆம் பாகமும் வெளியாகி ஆயிரம் கோடிக்கு மேல் கிட்டத்தட்ட 1200 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. அடுத்ததாக நடிகர் யார் என்ன படம் நடிக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அதன்படி தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான நளதமயந்தி திரைப்படத்தில் நடித்திருந்த கீது மோகன் தாஸ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார்.
அதன்படி யாஷின் 19 ஆவது படமாக உருவாக உள்ள இந்த படத்திற்கு டாக்ஸிக் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. அதேசமயம் இந்த படம் 2025 ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கே வி என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமும் மாஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தில் கரீனா கபூர் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் இந்த படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, யாஷுக்கு சகோதரியாக நடிக்க உள்ளார் என்று புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இதன் மூலம் படத்தின் மீது எதிர்பார்ப்பும் அதிகமாகி உள்ளது. மேலும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
- Advertisement -