நயன்தாரா, வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நயன்தாரா, தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.
இந்தப் படத்தை ரெட் சில்லீஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் கீழ் கௌரி கான் தயாரிக்கிறார்.
மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இந்த படம் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இதற்கிடையில் நயன்தாரா ஜெயம் ரவியுடன் இணைந்து இறைவன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஏ படம் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் யுவன் சங்கர் ராஜா இசையிலும் உருவாகியுள்ளது. இது ஒரு ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாகும். வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி இந்த படம் திரையிடப்பட இருக்கிறது.
நயன்தாரா மேலும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் பிரபல யூட்டியூபர் டியூட் விக்கி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் தற்போது நயன்தாரா வெப் சீரிஸ் முறையில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த புதிய வெப் சீரிஸ் விக்ரம், லியோ படங்களில் பாடல் எழுதிய விஷ்ணு எடவன் இயக்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நயன்தாரா ஏற்கனவே, Bahubali before the beginning வெப் சீரிஸில் நடிக்க இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு செய்திகள் பரவி வந்தது.
ஆனால் அதன் பிறகு அது தொடர்பான எந்த தகவலும் வெளிவரவில்லை.காஜல் அகர்வால், தமன்னா உள்ளிட்டவர்கள் நடித்த வெப் சீரிஸ் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் நயன்தாராவும் வெப் சீரிஸில் நடிக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகபடுத்தி உள்ளது.