Homeசெய்திகள்சினிமாவிஷ்ணுவரதனின் அடுத்த படம் 'நேசிப்பாயா'.... ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு!

விஷ்ணுவரதனின் அடுத்த படம் ‘நேசிப்பாயா’…. ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு!

-

- Advertisement -

நேசிப்பாயா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குனர் விஷ்ணுவரதன் கடந்த 2003 ஆம் ஆண்டு குறும்பு என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். விஷ்ணுவரதனின் அடுத்த படம் 'நேசிப்பாயா'.... ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு!அதைத்தொடர்ந்து அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா, ஆரம்பம் என பல படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் பணியாற்றி வருகிறார். இவரது இயக்கத்தில் தற்போது நேசிப்பாயா எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இதில் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்திருக்கிறார். அடுத்தது குஷ்பூ, பிரபு, சரத்குமார், ராஜா உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். எக்ஸ் பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இதற்கு இசை அமைத்திருக்கிறார். கேமரான் எரிக் ப்ரிசன் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். விஷ்ணுவரதனின் அடுத்த படம் 'நேசிப்பாயா'.... ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு!இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் பட குழுவினர் சார்பில் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து இந்த படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து தொலஞ்ச மனசு எனும் முதல் பாடல் வருகின்ற அக்டோபர் 11ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ