சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் வேட்டையன். ரஜினிகாந்தின் 170வது படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை டிஜே ஞானவேல் இயக்கியிருக்கிறார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத்தின் இசையிலும் இந்த படம் உருவாகியுள்ளது. படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி, ரோகினி, கிஷோர், ரக்ஷன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஆக்சன் கலந்த கதை களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் நாளை (அக்டோபர் 10) தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படத்தினை திரையரங்குகளில் காண ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி வேட்டையன் படத்தின் டிக்கெட் முன்பதிவு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழக திரையரங்குகளில் நாள் ஒன்றுக்கு நான்கு காட்சிகள் திரையிடப்பட இருந்தது. இந்நிலையில் கிட்டத்தட்ட 800 திரையரங்குகளுக்கும் அதிகமான திரையரங்குகளில்
வெளியிடப்படும் வேட்டையன் திரைப்படத்திற்கு நாளை ஒரு நாள் மட்டும் ஐந்து காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனவே நாளை காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட இருக்கிறது. இந்த தகவல் ரஜினி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
- Advertisement -